தமிழகத்தில் 24 மணி நேர குடிநீர் வழங்க 5 ஆண்டு இலக்கு – முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு

தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 24 மணி நேர தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தின் 25 மாநகராட்சிகளிலும் 24x7 குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் தினமும் குறைந்தபட்சம் 3 மணி நேரம் குடிநீர் வழங்கும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், குடிநீர் விநியோக கட்டமைப்பை மேம்படுத்துதல், பழைய குழாய் இணைப்புகளை புதுப்பித்தல், நீர் வீணாவதை குறைத்தல் மற்றும் நீடித்த நீர் மேலாண்மை திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், சென்னை நகரின் முக்கிய நீர்வழித்தடங்களான கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்கும் பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 📻 Kavin Radio 🌐 www.kavinradio.in

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Cricket Live score

YouTube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? – தொடக்கநிலையினருக்கான முழு விளக்கம்