குறுவை சாகுபடிக்கு பெரும் ஊக்கம்: முதல்வர் விஜய் ரூ.269.66 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்
தமிழகத்தில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், ரூ.269.66 கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் மற்றும் சேமிப்பு திட்டங்களுக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் மையங்கள் மேம்படுத்தப்படுவதுடன், விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. ரூ.134.83 கோடி மதிப்பில் புதிய கொள்முதல் வசதிகள் உருவாக்கப்படுவதுடன், டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ரூ.57.33 கோடி மற்றும் ரூ.77.50 கோடி மதிப்பிலான கூடுதல் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும், தானியங்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக புதிய கிடங்குகள் மற்றும் சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெறுவதுடன், நெல் கொள்முதல் பணிகளும் தாமதமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேரடியாக பயனடைவார்கள் என்றும், மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறுவை சாகுபடியை வலுப்படுத்தும் இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளன

கருத்துகள்
கருத்துரையிடுக