கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு!
தமிழ்நாட்டில் எம்-சாண்ட் (M-Sand), பி-சாண்ட் (P-Sand), ஜல்லி உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலை கடந்த ஒரு வாரத்தில் 20% முதல் 100% வரை உயர்ந்துள்ளது.
சுரங்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் பல குவாரிகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டுமானத் துறையினர் தெரிவிப்பதாவது, டீசல் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் வீடு கட்டும் செலவு கணிசமாக அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த விலை உயர்வு தொடர்ந்தால் புதிய வீடுகள் மற்றும் கட்டுமானத் திட்டங்களின் செலவு 10% வரை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
🔴 கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையினர் கவலை!
📻 மேலும் செய்திகள்: Kavinradio.in

கருத்துகள்
கருத்துரையிடுக