ஆதார் கார்டு அப்டேட்: 2026-ல் வந்துள்ள புதிய மாற்றங்கள் என்ன? மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்
இந்தியாவில் அடையாள ஆவணங்களில் மிகவும் முக்கியமானது ஆதார் அட்டை (Aadhaar Card). வங்கி கணக்கு, பான் கார்டு, அரசு நலத்திட்டங்கள், மொபைல் சிம், வருமான வரி தாக்கல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு ஆதார் கட்டாய ஆவணமாக மாறியுள்ளது. இதனால் ஆதார் தகவல்கள் சரியாகவும், புதுப்பித்ததாகவும் இருக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறத ஆதார் அட்டையை ஏன் அப்டேட் செய்ய வேண்டும்? ஆதாரில் முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், பெயர் எழுத்துப் பிழை, பிறந்த தேதி பிழை போன்றவை இருக்கின்றன. இந்த தவறுகள் அரசு திட்டங்களின் நன்மைகளை பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதனால் ஆதார் விவரங்களை உடனுக்குடன் புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். மொபைல் போன் மூலம் அப்டேட் பண்ணலாம் 2026-ல் வந்துள்ள புதிய மாற்றங்கள் 1. புதிய ஆவணங்கள் சேர்க்கப்பட்டன ஆதார் பதிவு மற்றும் திருத்தத்திற்காக இப்போது பல புதிய ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன: e-Voter ID e-Ration Card திருமணச் சான்றிதழ் விவாகரத்து ஆவணம் வங்கி பாஸ்ப...